ஒருவர் மருத்துவராக வேண்டுமென்றால், அவருக்கு ஆழமான சிந்தனை சக்தி இருக்கவேண்டும். அதற்கு அவரது ஜாதகத்தில் சந்திரன் சரியான நிலையில் இருக்கவேண்டும்.
விரைவாக சிந்தித்து அதைச் செயல்வடிவில் கொண்டுவருவதற்கு புதனின் உதவி தேவை. உடலிலுள்ள நரம்பு, தசை, உறுப்புகளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு சுக்கிரனின் உதவி தேவை.
உறுப்புகளைப் பார்த்து பயப்படாமலிலிருப்பதற்கும், தைரியமாக செயல்பட்டு நோய்களை குணப்படுத்துவதற்கும் செவ்வாயின் உதவி தேவை.
அறுவை சிகிச்சை நிபுணரென்று புகழ்பெறுவதற்கு குரு பகவானின் அருள் தேவை.
ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் செவ்வாய் இருந்து, அதை குரு பார்க்க, சனியுடன் சுக்கிரன் இருந்து அவற் றையும் குரு பார்த்தால், அவர் நல்ல மருத்துவராக வருவார். அந்த ஜாதகத் தில் சந்திரனும் குருவும் சேர்ந்து 7 அல்லது 9-ல் இருந்தால், பெயர்பெற்ற மருத்து வராவார்.
லக்னத்திற்கு 2-ல், 2-ஆம் பாவாதி பதியுடன் சுக்கிரன், சந்திரன் இருந்தால், அந்த ஜாதகர் ஆழமாக சிந்திப்பார். அதே ஜாதகத்தில் 10-ல் செவ்வாய் இருந்தால், ஒரு பெரிய மருத்துவராக வருவார். ஏனென்றால், சுக்கிரன், சந்திரன் 2-ஆம் பாவாதிபதியுடன் சேரும்போது, 10-ல் செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகர் துணிச்சலாகத் தன் மருத்துவப் பணியைச் செய்வார்.
2-ஆம் பாவத்தில் புதன், சுக்கிரன், சந்திரன்; 3-ல் சூரியன்; 10-ல் செவ்வாய்; 12-ல் குரு இருந்தால், அவர் கடுமையாக உழைத்து, நன்கு படித்துப் பட்டம் பெற்று மருத்துவராவார். ஏனென்றால், புதன், சுக்கிரன், சந்திரன் சேரும்போது, அவருக்கு ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டுமென்ற சிந்தனை எப்போதும் இருக்கும். தான் ஆய்வுசெய்த விஷ யத்தை, மருத்துவத்துறையில் ஈடுபடும் அவர் புத்தகங்களாக எழுதுவார்.
லக்னத்தில் செவ்வாய்; 4-ல் சனி; 10-ல் குரு, சுக்கிரன், சந்திரன், புதன் இருந்தால், அந்த ஜாதகர் பல விஷயங்களில் ஆராய்ச்சி செய்து, புகழ்பெற்ற மருத்துவராவார்.
லக்னத்தில் சுக்கிரன், சூரியன், சந்திரன், புதன்; 4-ல் செவ்வாய்; 7-ல் சனி; 9-ல் கேது இருந்தால், ஜாதகர் ஆழமாக சிந்திப்பார். மனித உடலைப் பற்றி நுட்பமாக ஆராய்வார். தன் இல்வாழ்க்கையில் சந்தோஷமற்றவராக இருந்தாலும், தான் ஈடுபட்டிருக்கும் மருத்துவத் துறையில் புகழ்பெற்றவராக இருப்பார்.
உச்ச புதன் சூரியனுடன் லக்னத்தில்; 2-ஆம் வீட்டில் சுக்கிரன், சந்திரன்; 4-ல் செவ்வாய், குரு இருந்தால், அந்த ஜாதகர் மருத்துவத்துறையில் புகழுடன் இருப்பார். 4-ல் செவ்வாய், குரு இருக்கும் பலர் மருத்துவராவார்கள்.
3-ல் ராகு; 7-ல் புதன், சூரியன்; 8-ல் சுக்கிரன், சந்திரன், சனி; 9-ல் கேது; 10-ல் செவ்வாய், குரு இருந்தால், அவர் தன் வாழ்க்கையின் முற்பகுதி யில் கஷ்டப்பட்டுப் படித்து ஆராய்ச்சியில் ஈடுபடுவார். பிற்பகுதியில் பெரிய மருத்துவரா வார். ஏனென்றால், 8-ல் இருக்கும் சுக்கிரன், சந்திரன், சனி 2-ஆம் பாவத்தைப் பார்க்கும். அதனால் அவர் எப்போதும் ஆழ்ந்த சிந்தனையுடன் இருப்பார். 10-ல் இருக்கும் செவ்வாய், குரு அவரை புகழ்பெற்ற மருத்துவராக்கும்.
2-ஆம் பாவத்தில் ராகு; 5-ல் சூரியன்; 6-ல் புதன்; 7-ல் செவ்வாய், சுக்கிரன், குரு; 8-ல் கேது; 9-ல் சனி; 10-ல் சந்திரன் இருந்தால், அவர் மிகப்பெரிய ஆராய்ச்சியை மருத்துவத்துறை யில் செய்வார். செவ்வாய், சுக்கிரன், குருவின் சேர்க்கை அவரை சிறந்த மருத்துவராக்கும்.
லக்னத்தில் சந்திரன்; 10-ல் செவ்வாய், புதன், சுக்கிரன், குரு இருந்தால், அந்த ஜாதகர் இளம் வயதிலேயே- புகழ்பெற்ற மருத்துவராக வர வேண்டும் என்ற கனவுடனே படிப்பார். கடுமை யாக உழைத்து மருத்துவராகி சாதனைபுரிவார்.
பரிகாரங்கள்
மருத்துவராவதற்கு ஏதேனும் தடைகளோ பிரச்சினைகளோ இருந்தால்...
காலையில் எழுந்தவுடன் சூரியனை வணங்கவேண்டும்.
ஆணாக இருந்தால் ஆஞ்சனேயரை நான்கு முறையும், பெண்ணாக இருந்தால் விநாயகரை நான்குமுறையும் சுற்றிவந்து வழிபடவேண்டும்.
கிழக்கில் தலைவைத்துப் படுப்பது நல்லது.
தன் லக்னாதிபதியின் ரத்தினத்தை அணிவது சிறப்பு. கறுப்புநிற ஆடையைத் தவிர்க்க வேண்டும். வீட்டில் அவசியமற்ற பொருட்களை சேர்த்து வைக்கக்கூடாது.
கிழக்குநோக்கி அமர்ந்து படிப்பது சிறந்தது.
வியாழக்கிழமை அரச மரத்தைச் சுற்றிவர வேண்டும்.
செல்: 98401 11534